Sunday, August 28, 2016

வவுனியா சேமமடு ஆதிவிநாயகர் ஆலய கும்பாபிசேக அறிவித்தல் !!(நோட்டீஸ் இணைப்பு )


வவுனியா சேமமடு படிவம் 1  அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய அஷ்டபந்தன பஞ்ச குண்டபக்ஷ புனராவர்த்தன பிரதிஷ்ட மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விழா எதிர்வரும் 04.09.2016ஞாயிற்றுக்கிழமைஎழுமணி முதல்   ஒன்பது மணிவரையான  சுப முகூர்த்த வேளையில்  பிரதிஸ்டகுரு சிவஸ்ரீ இராமநாத பத்மகுமார குருக்கள்  தலைமையில். இடம்பெறுகிறது.

மேற்படி ஆலயத்தின்.
02.09.2016 வெள்ளிகிழமை  கர்மாரம்பமும்
03.09.2016  சனிக்கிழமை எண்ணெய் காப்பும்  
04.09.2016  ஞாயிற்றுகிழமை  கும்பாபிசேகமும் இடம்பெறுகிறது.
தொடர்ந்து  மண்டலாபிசெகமும் இடம்பெறும்!











வவுனியாவிலிருந்து நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு நடைபவனி !(படங்கள்)


வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்தின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு வவுனியாவிலிருந்து வேல்தாங்கிய பாதயாத்திரை கடந்த  (25.08.2016)  வியாழக்கிழமை வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தில் விஷேட பூஜை வழிபாட்டுடன் ஆரம்பமானது.
ஆலய நிர்வாகியும் அறநெறிச் செல்வியுமான கு.ஜெயராணி (சாமி அம்மா) தலைமையில் ஆரம்பமான பாதயாத்திரையில் பெருந்திரளான நல்லூர்க் கந்தன் அடியார்கள் கலந்துகொண்டனர்.

வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட வேல்தாங்கிய பாதயாத்திரைக்குழுவினர் மன்னார் வீதியூடாக வவுனியா நகரை அடைந்து பின்னர் A9 வீதியூடாக நல்லூர் கந்தன் ஆலயத்தினை நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.






















வவுனியா தெற்கிலுப்பைக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்-2016(படத்தொகுப்பு,வீடியோ )


வவுனியா தெற்கிலுப்பைக்குளம் 6ம் ஒழுங்கை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் விஞ்ஞாபனம் கடந்த 17.08.2016 அன்று 
ஆலய பிரதமகுரு சிவாச்சாரிய திலகம் சிவ ஸ்ரீ சிவசங்கர குருக்ககள் மற்றும் சி .ஸ்ரீ .சங்கரசர்மா  தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
 ஆலயத்தின்  வருடாந்த  மகோற்சவத்தில் 

  26.08.2016 அன்று   காலை சங்காபிசேகத்துடன் அலங்கார உற்சவம் இடம்பெற்று 27.08.2016 சனிக்கிழமை  தீர்தோற்சவம்  மிகச் சிறப்பாக இடம்பெற்று  கொடியிறக்கத்துடன்நிறைவுபெற்றது.

மேற்படி உற்சவகாலத்தில் காவடி பாற்ச்செம்புத் திருவிழா, மாவிளக்குத் திருவிழா, இத் திருவிழாவில் பக்தர்கள் பாற்ச்செம்பு, தீச்சட்டி, காவடிகள் எடுத்து தமது நேர்த்திக் கடனை அம்மனுக்கு செலுத்தியிருந்தனர் .
படங்கள் :வவுனியா கோவில்கள் இணையம்



































 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha