Tuesday, May 30, 2017

வவுனியா முருகனூர் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய அலங்கார உற்சவம் -2017


வவுனியா முருகனூர்   ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய   வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த  28.05.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில்   மகோற்சவகுரு சிவஸ்ரீ  சிதம்பர லட்சுமி திவாகர குருக்கள் தலைமையில் கொடியேற்றதுடன்  ஆரம்பமானது.
பத்து  தினங்கள் இடம்பெறும் உற்சவத்தில்
சப்பர திருவிழா  04.06.2017 ஞாயிற்றுக்கிழமை
கிராமவலம்   05.06.2017 திங்கட்கிழமை   
தீர்த்தோற்சவம்  06.06.2017  செவ்வாய்கிழமை

ஆகியன இடம்பெறுகின்றன.







வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தான மகோற்சவம் -2017



வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தின்  வருடாந்த மகோற்சவம் நாளை 31.05.2017 புதன் கிழமை காலை 10.00 மணியளவில்   மகோற்சவகுரு சிவஸ்ரீ  செல்வ சர்மில குருக்கள் தலைமையில் கொடியேற்றதுடன்  ஆரம்பமாகவுள்ளது.
பத்து  தினங்கள் இடம்பெறும் உற்சவத்தில்
கொடியேற்றம்   31.05.2017  புதன்கிழமை காலை 10.00 மணி
சப்பர திருவிழா  07.06.2017 புதன்கிழமை
இரதோற்சவம்  08.06.2017 வியாக்கிழமை  காலை 8.45 மணி
தீர்த்தோற்சவம்  09.06.2017  வெள்ளிக்கிழமை  காலை 10.30  மணி

பூங்காவனம்     10.06.2017  சனிக்கிழமை ஆகியன இடம்பெறும் ..






வவுனியா முருகனூர் சித்தி விநாயகர் ஆலய வசந்த மண்டபத்திற்கான அடிகல் நாட்டல்!!


வவுனியா முருகனூர் சித்தி விநாயகர் ஆலயம் வசந்த மண்டபத்திற்கான அடிகள் நாட்டுதல் நிகழ்வு நேற்று (26.05.2016) நண்பகல் 12 மணியளவில் ஸ்ரீ சிதம்பர லக்ஷ்மி திவாகரக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது.​
இந் நிகழ்வில் சந்திரகுலசிங்கம் மோகன் (உபநகர பிதா), சிதம்பரபுரம் பொலிஸ் அதிகாரி, வவுனியா மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் , அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.











Saturday, May 13, 2017

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கோபுரத்தின் மீது விழுந்த மின்னல்! (படங்கள்)


வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் அமைக்கபட்டு வரும் இராஜகோபுரத்தின் மீது  நேற்று (12.05.2017) வெள்ளிகிழமை பிற்பகல் 4.30மணியளவில்   இடி மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்தபோது கோபுரத்தின் உச்சியில் இடிமின்னல் தாக்கியது . இதனால் உச்சியில் அமைக்கபட்டிருந்த பொம்மை ஒன்றுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது.
கிராம மக்களை இடி மின்னல்  தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கே  கோவில் கோபுரங்களை அமைத்து அதன்மீது  இடிதாங்கும் சக்திபடைத்த கலசங்கள் வைக்கபடுவது வழமை  எனினும் இது புதிதாக அமைக்கபட்டு வரும் கோபுரம் ஆகையால்  மேற்படி மின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கான பொறிமுறை அமைக்கப்பட்டிருக்கவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.











Tuesday, May 9, 2017

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் தேர்த் திருவிழா!(படங்கள்,வீடியோ)


வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ  சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா நேற்று  (09.05.2017 செவ்வாய்கிழமை )காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஆறுமணியளவில் கொடிதம்ப பூசை இடம்பெற்று காலை ஏழுமணிளவில் வசந்தமண்டப பூஜையும் தொடர்ந்து எட்டுமணியளவில் எம்பெருமான் விநாயகப் பெருமானும் சண்டேஸ்வரரும் திருத்தேரில் ஆரோகணித்தனர்.

தொடர்ந்து எட்டரை மணியளவில் ரதோற்சவம் இடம்பெற்று காலை ஒன்பதரை மணியளவில் ரதம் இருப்பிடத்தை வந்தடைய அர்ச்சனைகள் இடம்பெற்றன. .இன்றைய தேர்த்திருவிழாவின் போது அடியார்கள் அங்கபிரதட்சணம் அடியடித்தல் மற்றும் கற்பூர சட்டி ஏந்தி தமது நேர்த்தி கடன்களை நிறைவு செய்தனர்.


இத் தேர்த் திருவிழாவில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் .பின்னர் காலை பதினொன்றரை மணியளவில் பச்சை சாத்தும் உற்சவம் இடம்பெற்றது .







































































 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha