Friday, September 29, 2017

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தான நவராத்திரி விழா!


வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தான நவராத்திரி விழா 29.09.2017 வியாழன் இடம்பெற்ற சரஸ்வதி பூஜை வழிபாடும், வீணை இசையாராதனை நிகழ்வும் இடம்பெற்றது .

மேலும்  மேலும் நவராத்திரி விரதத்தின் போது ஆலயத்தில்   25,26.09.2017 திங்கள்,செவ்வாய்கிழமை   மஹாலக்ஷமி பூஜை வழிபாடும், காணாமிர்த கலாலய மாணவர்களின் மிருதங்க, வயிலின் இசையாராதனை நிகழ்வுகளும் இடம்பெற்றன .


















Wednesday, September 27, 2017

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான கொடியேற்றம்!


வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா நேற்று   (26.09.2017)   செவ்வாய்கிழமை பகல் 11.00மணிக்கு சிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில்  கொடிஏற்றத்துடன்  ஆரம்பமானது.
மேற்படி ஆலயத்தில் 10  நாட்கள்  இடம்பெறும் பிரம்மோற்சவத்தில்
 சப்பர திருவிழா -03.10.2017   செவ்வாய்கிழமை  இரவு 8.00 மணிக்கும்
தேர் திருவிழா -04.10.2017  புதன்கிழமை  காலை 10.30 மணிக்கும்
தீர்தோற்சவம் – 05.10.2017  வியாழக்கிழமை  11.00 மணிக்கும்
திருக்கல்யாணம் – 06.10.2017   வெள்ளிக்கிழமை  மாலை 6.00 மணிக்கும்
ஆஞ்சநேயர் உற்சவம் 07.10.2017   சனிக்கிழமை  காலை 10.30 மணிக்கும் இடம்பெற இருக்கிறது.
பக்த அடியார்கள் வருகை தந்து அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அருளை பெற்று கொள்ளும் வண்ணம் வேண்டப்படுகின்றனர்.









Monday, September 25, 2017

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான பிரம்மோற்சவம்-2017!!


வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா நாளை  (26.09.2017)   செவ்வாய்கிழமை பகல் 11.00மணிக்குசிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில்  கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகிறது.

மேலும் சப்பர திருவிழா -03.10.2017   செவ்வாய்கிழமை  இரவு 8.00 மணிக்கும்
தேர் திருவிழா -04.10.2017  புதன்கிழமை  காலை 10.30 மணிக்கும்
தீர்தோற்சவம் – 05.10.2017  வியாழக்கிழமை  11.00 மணிக்கும்
திருக்கல்யாணம் – 06.10.2017   வெள்ளிக்கிழமை  மாலை 6.00 மணிக்கும்
ஆஞ்சநேயர் உற்சவம் 07.10.2017   சனிக்கிழமை  காலை 10.30 மணிக்கும் இடம்பெற இருக்கிறது.
பக்த அடியார்கள் வருகை தந்து அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அருளை பெற்று கொள்ளும் வண்ணம் வேண்டபடுகின்றனர்.








Thursday, September 21, 2017

வவுனியாவில் ஆலயங்களில் நவராத்திரியை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள்!


வவுனியாவில்  இன்றைய தினம்   ஆரம்பமாகும்  நவராத்திரியை முன்னிட்டு  ஆலயங்களில் வைக்கபட்டுள்ள  கொலு பொம்மைகளின்  அலங்காரங்கள்..

வவுனியா  குருமன்காடு  ஸ்ரீ விநாயகர்  தேவஸ்தானம்










வவுனியா குட்செட் வீதி  ஸ்ரீ கருமாரியம்மன்  ஆலயம்













வவுனியா ஓமந்தை பொற்கோவில் கொலு அலங்காரம்  








 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha