Wednesday, June 29, 2016

வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் பொற்கோயில் வருடாந்த பொங்கல் விஞ்ஞாபனம் -2016



வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் விஞ்ஞாபனம் (04.07.2016) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 11.07.2016 அன்று பொங்கல் உற்சவம் நடைபெற்று 12.07.2016 அன்று வைரவர் மடையுடன் நிறைவுபெறவுள்ளது.
தினமும் கண்ணகை அம்மன் ஏடு வாசிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளதுடன் தினமும் அன்னதானமும் வழங்கப்படவுள்ளது. பக்த அடியார்கள் அனைவரையும் கலந்துகொண்டு கண்ணகை அம்மனின் அருளைப் பெற்றுய்யுமாறு
ஆலய பரிபாலன சமையினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

பொங்கல் தினத்தன்று பாற்குடம்,தீச்சட்டி,காவடி  எடுப்பவர்கள்  நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும் .பொங்கல் தினத்தன்று  1008 பானைகளில் பொங்கல் இடம்பெறும் .இப்பொங்கல் வைபவத்தில் கலந்து கொள்ளும் அடியார்கள் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பொங்கலுக்கு தேவையான பானை மற்றும் பொங்கல் பொருட்களை பெர்ருகொள்ளமுடியும்,விசேட போக்குவரத்து  ஒழுங்குகள் மேற்கொள்ளபட்டுள்ளன.
 பொங்கல் தினத்தன்று விசேட கலை நிகழ்வுகளும் இடம்பெறும் ...







வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவ பெருவிழா அறிவித்தல்!




இலங்கை திரு நாட்டின் கண்ணே வடபால் அமைந்து சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வன்னி மாநகரில் வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் பதியில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு எதிர்வரும் ௦5.07.2016 செவ்வாய்கிழமை நண்பகல் பன்னிரண்டு மணியளவில் மகோற்சவ குரு சிவஸ்ரீ .சதா சங்கரதாஸ் சிவாசாரியார் தலைமையில் கொடிஏற்றதுடன் மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகவுள்ளது.
மேற்படி மகோற்சவத்தில்
05.07.2016 செவ்வாய்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு கொடியேற்றமும்
17.08.2016 ஞாயிற்றுகிழமை சப்பர திருவிழாவும்
18.08.2016 திங்கட்கிழமையன்று காலை ரதோற்சவமும்
19.08.2016 செவ்வாய்கிழமையன்று தீர்த்தோற்சவமும் இடம்பெறும் .
தினமும் மகேஸ்வர பூஜை இடம்பெறும்.

மேலதிக தொடர்புகளுக்கு
0242222788
ஆலயபரிபாலன சபை




Wednesday, June 22, 2016

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானத்தின் பூங்காவன திருவிழா!!(படங்கள்)


வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானத்தின்  வருடாந்த  மகோற்சவத்தில் நேற்று 21 .06.2016  பூங்காவன திருவிழா    ஆலய பிரதமகுரு  சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக்குருக்கள் இடம்பெற்றது . 
 பூங்காவன திருவிழாவின் பொது விநாயகபெருமான்  அலங்கரிக்கபட்ட  பூந்தண்டிகையில்   வீதி வலம்வந்து பக்தர்களுக்கு  அருள்பாலித்தார் .







Sunday, June 12, 2016

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா!!(படத்தொகுப்பு, காணொளி)


வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் நேற்று11.06.2016 சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 10 மணியளவில் வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடைந்தன. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் இரவு பூஜைகள் சிறப்பாக இடம்பெற்று அலங்கரிக்கபட்ட  முத்து சப்பரத்தில்  ஸ்ரீ லட்சுமி சமேத நரசிங்கர்  வீதியுலா வந்து பொங்கல் வைபவமும் இடம்பெற்றது .

9 மணியளவில் ஆரம்பமான இரவு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள் மற்றும் இலங்கையின் முன்னணி இசைக் குழுவான சிவகுமாரின் அக்கினி இசைக் குழுவின் இன்னிசை நிகழ்வு என்பன அதிகாலை 5 மணிவரை நடைபெற்றது.

இந்நிகழ்வுகள் அனைத்தையும் வவுனியா நெற் இணையம் முழுமையாக நேரடி HD மற்றும் டிஜிட்டல் தொழிநுட்பத்துடன் ஓளிபரப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

பகல் நிகழ்வுகள் காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரையும் இரவு நேர நிகழ்வுகள் 9 மணிமுதல் அதிகாலை 5 மணிவரையும் மிகச் சிறப்பாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வெளிநாட்டில் வாழும் வவுனியா வாழ் உறவுகளை ஒன்றிணைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட நேரடி ஒளிபரப்புச் சேவையினை ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது.






























Saturday, June 11, 2016

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானம் கொடியேற்றம்!(படங்கள்)


வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானத்தின்  வருடாந்த  மகோற்சவம்  மூன்று வருடங்களின் பின்   ஆலய பிரதமகுரு  சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக்குருக்கள் தலைமையில் நேற்று (11.06.2016)  காலை 10.30  மணியளவில்  கொடிஏற்றதுடன்  ஆரம்பமாகியது .














 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha