Wednesday, March 30, 2016

வவுனியா தாண்டிக்குளம்அற்புத ஐயனார் மகா கும்பாபிசேக அறிவித்தல் !


வன்னி மன்னின் ஏற்றமிகு வவுனியா நன்னகரின் தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள அற்புத ஐயனார் ஆலய மகா கும்பாபிசேக பெருவிழா நிகழும் மங்கள கரமான மன்மத வருடம் பங்குனி மாதம் 21ம் நாள் 03.04.2016 ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதியும் திருவோண நட்சத்திரமும், அமிர்தயோகமும் கூடிய சுபதினத்தில் பூரணை புட்கலை சமேதே ஐயனார் மற்றும் பரிவார நூதன மூர்த்திகளுக்கும் காலை 08மணி 45நிமிடம் வரையுள்ள இடப லக்கின சுபமுகூர்த்தத்தில் மகாகும்பாபிசேக பெரும் சாந்திவிழாவும் கிரியைகளும்நடைபெறும்.
இவ் அற்புத ஐயனார் கோவில் மூலவரின் கண்களில் இருந்து 19.08.2001 ஆவணி முதல் ஞாயிறு அன்று  மூலவரின் கண்கள்அகல விரிந்து காணப்பட்டதுடன் கண்களில் இருந்து கண்ணீரும் வடிந்த அதிசியம் நிகழ்ந்ததும் நோய், பிணிகளை நீக்கும் கோவில் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.





Friday, March 25, 2016

வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலின் பதினைந்தாம் நாள் தீர்த்தோற்சவம்!!(படங்கள்,வீடியோ)


வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தின் தீர்த்த உற்சவம் 23/03/2016 புதன்கிழமை இடம்பெற்றது. அதிகாலை ஐந்து மணிக்கு அபிசெகங்கள்ஆரம்பமாகி கும்ப பூஜையும் காலை ஆறுமணிக்கு மூலஸ்தான பூஜையும் அதனை தொடந்து காலை ஆறு நாற்பந்தைந்து மணிக்கு தம்ப பூஜை இடம்பெற்றது.

தொடர்ந்து ஆலயத்திலிருந்து கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் கோவில் நோக்கி பாற்குட பவனி இடம்பெற்றது. ஒன்பது மணிக்கு பொற்சுண்ணம் இடித்து மூலமூர்த்திகளுக்கு அபிசேகங்கள் இடம்பெற்று ஒன்பதரை மணியளவில் வசந்த மண்டபபூஜை இடம்பெற்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்விநாயகர் வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் பத்து மணியளவில் அமிர்தவர்ஷினி தீர்த்த கரையில் எழுந்தருளி தீர்த்தோற்சவம் இடம்பெற்றது. தொடர்ந்து வெளிவீதி உலாவந்து யாகம் கலைக்கப்பெற்று வழமையான பூசையுடன் பகல் உற்சவம் நிறைவு பெற்றது.




































Thursday, March 24, 2016

வவுனியா குட்செட்வீதி கருமாரியம்மன் ஆலய தீர்தோற்சவம்!(படங்கள் வீடியோ!)


வவுனியா குட்செட்வீதி கருமாரியம்மன் ஆலய மஹோற்சவத்தின்  பத்தாம்  நாளான நேற்று  23.03.2016 புதன் பத்தாம் நாள் தீர்த்த உற்சவம் இடம்பெற்றது.

நேற்று காலை முதல் கிரியைகள்  ஆலய பிரதமகுரு தலைமையில் ஆரம்பமாகி சுண்ணம் முதலியவை பாடப்பெற்று  அம்பாள் தீர்த்தம் ஆடி பின்னர் யாகம் கலைக்கப்பட்டது. மாலையில் கொடிஇறக்க  வைபவம் இடம்பெற்றது .













Wednesday, March 23, 2016

வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்பாள் ரதோற்சவம் !!(படங்கள்)


வவுனியா குட்செட்வீதி கருமாரியம்மன் ஆலய மஹோற்சவத்தின் ஒன்பதாம் நாளான  22.03.2016 செவ்வாய்கிழமை  ரதோற்சவம்  இடம்பெற்றது .

காலைமுதல் அபிசேகங்கள் ஆராதனைகள் இடம்பெற்று  காலை ஒன்பதரை மணியளவில் கருமாரி அம்பாள் ரதமேறி  திருவீதி  உலா வந்த  நிகழ்வு இடம்பெற்றது.  














 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha