Tuesday, May 31, 2016

நயினை நாக­பூ­ஷ­ணிக்கு மகோற்­சவம் எதிர்­வரும் 6 ஆம் திகதி கொடி­யேற்­றத்­துடன் ஆரம்பம்!!


சரித்­திர பிர­சித்தி பெற்ற நயி­னா­தீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆல­யத்­தி­னது வரு­டாந்த மகோற்­சவம் எதிர்­வரும் மாதம் 6 ஆம் திகதி திங்கட் கிழமை நண்பகல் 12 மணி­ய­ளவில் கொடி­யேற்­றத்­துடன் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.
 
தொடர்ந்து பதி­னாறு தினங்கள் உற்­ச­வங்கள் ஆல­யத்தில் இடம் பெற­வுள்­ளது. 14 ஆம் திகதி செய்­வாய்க்­கி­ழமை 108 சங்­குகளால் அம்­பா­ளுக்­கு பால் அபி­ஷே­கமும் 15 ஆம் திகதி புதன்­கி­ழமை பகல் சிவ­பூ­சை­யுடன் இரவு திரு­மஞ்­சமும் 16 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பகல் விசேட கருட பூசையும் 18 ஆம் திகதி சனிக்­கி­ழமை இரவு பெரிய சப்ப­ரத்­தி­ரு­வி­ழாவும் மறு­தி­ன­மான 19 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை காலை தேர்­த்தி­ரு­வி­ழாவும் 20 ஆம் திகதி திங்­கட்­கி­ழ­மை­ காலை தீர்த்தத் திரு­வி­ழாவும் 21 ஆம் திகதி செய்­வாய்க்­கி­ழமை மாலை தெற்­பத்­தி­ரு­வி­ழா­வுடன் ஆல­யத்­தி­னது உற்­ச­வங்கள் யாவும் நிறை­வ­டையும்.
 
ஆல­யத்­தி­ரு­வி­ழாவில் கலந்து கொள்­கின்ற அடியார்களி­னது தாக சாந்தி மற்றும் பசிப் பிணி ஆகி­ய­வற்­றினை தீர்ப்ப­தற்­கான ஏற்­பா­டு­களை ஆலயத்தின் மீது பற்­றுள்ள பல அடி­யார்­களும் அமுத சுரபி அன்ன­தான சபை­யி­னரும் ஒழுங்கு செய்து வரு­கின்­றனர். ஆல­யத்­தி­ரு­விழா காலங்­களில் நாட்­டி­னது பல இடங்­களில் இருந்தும் ஆல­யத்­திற்கு வரு­கின்ற அடியார் களி­னது போக்­கு­வ­ரத்து வச­திகள் யாழ்ப்­பாணம் மத்­திய பஸ் தரிப்பு இடத்தில் இருந்து குறி­காட்­டுவான் இறங்கு துறை வரைக்கும் இலங்கைப் போக்­கு­வ­ரத்து வட­பி­ராந்­திய சபையும் தனியார் சிற்­றூர்தி சங்­கத்தைச் சேர்ந்த சிற்­றூர்­தி­களும் அதிக அளவில் சேவையில் ஈடு­ப­டு­வ­தற்கும் முன்­வந்­துள்­ளனர்.
 
இதே­போன்று குறி­காட்­டுவான் இறங்கு துறைக்கும் நயி­னா­தீவு இறங்கு துறைக்குமிடையே சேவையில் ஈடு­ப­ட­வி­ருக்கும் மோட்டார் பட­கி­ன­து­ சே­வை­களும் ஆலயத் திரு­விழா காலங்­களில் வரு­கின்ற யாத்­தி­ரிகர்களி­னது வரு­கை­யினைத் தொடர்ந்து கட்­டுப்­பாடு இன்றி சேவை­களை மேற்­கொள்­வ­தற்கு முன்­வந்­துள்­ளன. இதே­போன்று ஆல­யத்­தி­னது திரு­வி­ழா­வினை யொட்டி சென்­ற­வ­ரு­டங்­களைப் போல இவ்­வ­ரு­டமும் மின்­சார விநி­யோ­கத்­தினை வழங்­கு­வ­தற்கு இலங்கை மின்­சார சபை­யினர் சம்­மதம் தெரிவித்­துள்­ளதுடன் சுகா­தாரத் திணைக்­களத்­தி­னரும் ஆலய சுற்­றா­டலில் புனிதத்­தன்­மை­யினை பேணு­வ­தற்­கு­ரிய அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­வதற்கு தயா­ராக உள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளனர். குடி தண்ணீர் சேவை­யினை வேலணை சாட்­டியில் இருந்து வேலணை பிர­தேச சபையின் ஊடாக தண்ணீர் பவு­சர்கள் மூல­மாக பெற்­றுக்­கொள்­வ­தற்கும் நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.
 
ஆலயத்­தி­னது திரு­வி­ழாக்­கா­லங்­களில் ஆலயச் சுற்று சூழல் பகு­தி­களில் மது­பா­வனை மற்றும் புகைத்தல் மற்றும் பச்சை குத்­துதல் போன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு முற்­று­மு­ழு­தாக தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.பொலித்தீன் பாவ­னை­களை வர்த்­த­கர்­களும் ஆல­யத்­திற்கு சென்று வரு­கின்ற மக்­களும் பாவிப்­ப­தற்கு முற்­றாக தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு பதி­லாக கட­தாசி (பேப்பர்) யிலான அல்­லது ஓலை­யினால் செய்­ய­ப்பட்ட பைகளைப் பாவிக்கும் படியும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. மேலும் நயி­னா­தீவு இறங்­கு­து­றை­மு­கத்தில் இருந்து குறிகாட்டுவான் இறங்குதுறை முகத்திற்கு இடையில் சேவையாற்றிவருகின்ற (பாரி) பாதை சேவையினை பழுதடையாத நிலையில் ஆலயத்தினது திருவிழா காலங்களில் இயங்குவதற்கு தயார் நிலையில் வைத்துக் கொள்ளும்படி யாழ். அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் யாழ்ப்பாண அதிகார திணைக்களத்தினது பொறியியலாளரை பணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2016


வரலாற்று பிரசித்தி பெற்ற வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவின் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர்தெரிவித்துள்ளனர்.
ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா, எதிர்வரும் திங்கட்கிழமை 06 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் உட்பட ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நலன் கருதிய செயற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து திணைக்களங்கள், நிறுவனங்கள், பொலிஸார் மற்றும் பக்கதர்களின் ஒத்துழைப்புடன் இம்முறையும் சிறப்பாக பொங்கல் விழா இடம்பெறவுள்ளதாக புதூர் ஆலய நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
புதூர் ஆலய பொங்கல் விழாவிற்கு வருடாந்தம் வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதருகின்றமை சிறப்பம்சமாகும்.






Monday, May 23, 2016

ஆறுமுகத்தான் புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அன்னதான மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டு!!(படங்கள்)


வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அன்னதான மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் கடந்த  21.05.2016 சனிக்கிழமை காலை  இடம்பெற்றது .

 இந்த நிகழ்வில் ,பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன்  மற்றும் கலாசார உத்தியோகத்தர்  நித்தியானந்தன்  கலந்து கொண்டு  ஆலயத்தின் அன்னதான மண்டபத்துக்கான அடிக்கல்லை  நாட்டி வைத்தனர் . மேற்படி நிகழவில் ஆலய பரிபாலன உறுப்பினர்கள் மற்றும் ஆறுமுகத்தான் புதுக்குளம் கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் ..











வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம் 2016!!(படங்கள்)


வவுனியா நெளுக்குளம் அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய  வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம்  கடந்த 21.05.  2016 சனிக்கிழமை காலை ஒன்பது மணியளவில்  இடம்பெற்றது . மாலையில் கொடியிறக்க வைபவமும் இடம்பெற்றது .






.


வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய இரதோற்சவம் 2016!!(படங்கள்)


வவுனியா நெளுக்குளம் அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய  வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் கடந்த 20.05.  2016 வெள்ளிகிழமை காலை ஒன்பது மணியளவில்  இடம்பெற்றது .
மேற்படி நிகழ்வில் நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டு கொண்டு தங்களது நேர்த்திகடன்களை நிறைவு செய்திருந்தனர் ...













Friday, May 20, 2016

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய தேர்த் திருவிழா!!(படங்கள்)


வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய தேர்த் திருவிழா நேற்று  (21.05.2016) வெள்ளிக்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
காலை ஐந்து மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஆறுமணியளவில் சிறப்புப் பூஜைகள் இடம்பெற்று காலை ஏழுமணிளவில் ஸ்ரீ காளியம்மனின் ரதோற்சவம் இடம்பெற்றது.


இன்றைய தேர்த்திருவிழாவின் போது அடியார்கள் காவடிகள், அங்கபிரதட்சணம், அடியடித்தால் மற்றும் கற்பூரசட்டி ஏந்தி தமது நேர்த்திகடன்களை நிறைவு செய்தனர்.

இத் தேர்த் திருவிழாவில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.















Wednesday, May 18, 2016

அம்மனுக்கு என்ன அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்!!




இந்த உலகை படைத்து, காத்து வரும் ஜகன்மாதாவுக்கு கீழ்கண்ட முறைப்படி அபிஷேகங்களைச் செய்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம். சந்தனாதித் தைலங்களால் அபிஷேகம் செய்பவர் சுகம் பெறுவர்.

அரிசி மாவு - மல நாசம் மலம் என்பது தீவினைகள்
மஞ்சள் பொடி - ராஜ வசியம், அரசாங்க அலுவல்களை விரைவில் சாதகமாக்கிக் கொள்ளலாம்.

பஞ்ச கவ்யம் - ஆத்ம சுத்தி, தெய்வீக சாதனைக்கு உதவுவது.

ரசபஞ்சாம்ருதம் - காரியசித்தி, எல்லாக் காரியங்களிலும் வெற்றி

பல(பழ)பஞ்சாமிர்தம் - தனவிருத்தி குறைவற்ற செல்வம் தரும்.

பால் - தீர்க்காயுள், நீண்ட ஆயுள்தரும்.

தயிர் - குழந்தைப்பேறு உண்டாகும்.

நெய் - மோக்ஷம் மோட்சத்தைத் தரும். ஞான விருத்தி, ஞானத்தை அளிப்பது.

தேன் - இனிமையான குரலையும், சங்கீதத்தில் திறமையையும் அளிக்கும்.

கருப்பஞ்சாறு - நித்ய சுகம், அளவற்ற இன்பங்களைக் கொடுக்கும்.

சர்க்கரை - சத்ரு நாசம், எதிரிகளை விரட்டி வெற்றி தரும்.

வாழைப்பழம் - தான்யவிருத்தி, பயிர் விருத்தி அமோக விளைச்சல் செழிப்பு.

பலாப்பழம் - எவரையும் வசப்படுத்தும் வசீகரத் தன்மை.


எலுமிச்சம்பழம் - ம்ருத்யு நிவாரணம், அகால மரணத்தை நிவிருத்தி செய்து வியாதிகளைத் தீர்த்து நலம் தரும்.

அன்னம் - ராஜகௌரவம், அரசுரிமை, அரசனுக்குச் சமமான போக போக்கியங்கள் தரும்.

இளநீர் - அபமிருத்யு நாசம். சத்புத்திரப்பேறு. கோரோசனை, தீர்க்காயுள், நீண்ட ஆயுள்.

பச்சைக்கற்பூரம் - பயத்திலிருந்து விடுவித்து மன நிம்மதியையும், சந்தோஷத்தையும் தரும்.

கஸ்தூரி - ஜயம் வெற்றி தரும்.


பன்னீர் - சாலோக்யம், தெய்வ உலகில் வாழும் பேறு கிட்டும்.

சந்தனக்குழம்பு - சாயுஜ்யம், சிறந்த ஞானம் பெற்று இறையுணர்வு பெற்று இறைவனோடு ஐக்கியமாகும் நிலை. சாயுஜ்ய நிலையளிக்கும்.

சுத்தமான குளிர்ந்த நீராலும், கங்கை முதலான புண்ணிய நதிகளின் தீர்த்தங்களால் அபிஷேகம் செய்பவர் அன்னையின் அருளுக்குப் பாத்திரமாகி அனைத்து வினைகளும் ஒழிந்து இவ்வுலக நலன்களும் மேலுகப் பேறும் ஒருங்கே பெறுவர்.


 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha