Thursday, February 23, 2017

வவுனியாவில் கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இடம்பெறும் தேசிய மகா சிவராத்திரி பெருவிழா-2017


இலங்கை திருநாட்டின் இருதயமாய் விளங்கும் வன்னிபிரதேசத்தில் கோவில் கொண்டு  ஈழத்தின் ஆறாவது ஈஸ்வரமாக  போற்றப்படும் அகிலாண்டேஸ்வரம்  என்கிற கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் இம்முறையும் தேசிய மகா சிவராத்திரி விரதம் அனுஸ்டிக்க படவுள்ளது .

24.03.2017  வெள்ளிகிழமை  காலை 6.00 மணிமுதல் ஆரம்பமாகும் பூசை அபிசேகங்கள்  மறுநாள் காலை வரை  நான்கு கால  பூசைகளும்  அதிகாலை 5.30 மணிக்கு  வசந்த மண்டப பூசையும் தீர்த்தோற்சவமும்  இடம்பெறும் .
மேற்படி சிவராத்திரி  நிகழ்வின் ஆலயத்தில் கலைநிகழ்வுகள் இடம்பெற இம்முறையும் ஒழுங்கு சசெய்யப்படுள்ளது. 
சிவராத்திரி விரதமிருக்கும் அடியார்கள்  பாற்குடம்  எடுக்கும் அடியார்கள்  நேர காலத்துடன் அலுவலகத்தில் உங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் .

சிவராத்திரி தினத்தன்று காலை ஒன்பது மணிமுதல் சமய தீட்சை வழங்கும் நிகழ்வும் இடம்பெறும் .

அடியார்களின் வசதி கருதி ஆலயத்தினால்  இரவு 6.00 மணிமுதல் அடுத்த நாள் காலை  6.00 மணி முதல் விசேட போக்குவரத்து  வசதிகளும் ஒழுங்கு செய்யபட்டுள்ளது .





Thursday, February 9, 2017

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் தேர்த்திருவிழா!(படங்கள்)


வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் துர்முகி வருடத்துக்கான மகோற்சவம் கடந்த 31.01.2017 கொடியேற்றதுடன் ஆரம்பமானது.
தொடர்ந்து நேற்றையதினம் சப்பறத்திருவிழா நடைபெற்றதுடன் இன்றைய தினம்(08.02.2017) வருடாந்த தேர்த்திருவிழா நடைபெற்றது.

முதலாம் குருக்குத்தெரு வீதி வழியாக பயணித்த தேர் வவுனியா மணிக்கூட்டுசந்தி , கந்தசுவாமி கோவில் வீதியுடாக ஆலயத்தினை வந்தடைந்தது.
இத் தேர்த்திருவிழாவில் பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டு தேங்காய் உடைத்தனர். மேளவாத்தியம் முழங்க பக்த அடியவர்கள் அரோகரா அரோகரா கூறியவாறு தேரினைப் பிடித்து இழுப்பதனை அவதானிக்க முடிந்தது.






































வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவத்தின் சப்பர திருவிழா!!(படங்கள்)


வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவத்தின் சப்பர திருவிழா 07.02.2017  செவ்வாய்கிழமை இடம்பெற்றது .மேற்படி உற்சவத்தின்  போது வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான்  சப்பரத்தில் வெளி வீதியுலா வரும் காட்சிகள்...



















 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha