Wednesday, December 14, 2016

வவுனியா கோவில்குளம் சிவன் கோவிலில் இடம்பெற்ற சொக்கப் பானை உற்சவமும் கார்த்திகை விளக்கீடும்!(படங்கள்,வீடியோ)


வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று முன்தினம் 13.12.2016  சொக்கப்பானை உற்சவமும் கார்த்திகை விளக்கீடு நிகழ்வும் சிறப்பாக  இடம்பெற்றது.
வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து  அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  உள் வீதி வலம்  வந்து  சொக்கப்பானை  உற்சவத்தில் கலந் கொண்டு  மீதும் வெளிவீதியை  வளம் வந்த நிகழ்வு இடம்பெற்றதோடு  கார்த்திகை  விளக்கீடு  நிகழ்வும் இடம்பெற்றது.























Monday, December 12, 2016

வவுனியாவில் முதன்முறையாக இடம்பெற்ற ஐயப்பன் மலையாள பூஜையின் பதிவுகள்!(வீடியோ)



வவுனியா இறம்பைகுளம்  அருள்மிகு கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய திருமண மண்டபத்தில் நேற்று  11.12.2016 ஞாயிற்றுக்கிழமை கிழமை காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை  வரை  இலங்கையில் இருந்து இதுவரைகாலமும் 5100 க்கும் மேற்பட்ட சாமிகளை  மலைக்கு அழைத்து சென்ற இந்துமத குருபீடாதிபதி சபரிமலை குருமுதல்வர் ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாச சாம்பசிவ சிவாசாரியார் அவர்களின் தலைமையிலான மலையாள பூஜை இடம்பெற்றது .

வடபகுதியின்  பிரதேசங்களில் இருந்தும் ஏராளமான ஐயப்பன் பக்தர்கள்  இந்நிகழ்வில்  கலந்து கொண்டனர் .
வீடியோ :சுதன் சர்மா 





Friday, December 9, 2016

வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஜயப்பன் குருபூஜையும் குருசாமிகள் கௌரவிப்பு!(படங்கள்)


வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடை பெறும் ஜயப்பன் குருபூஜை மற்றும்  குருசாமிகள் கௌரவிப்பு நிகழ்வுகள் நேற்று  வெள்ளிக்கிழமை (09.12.2016) காலை 11.00 மணி அளவில் பாபு குருசாமி தலைமையில் சிறப்பாக நடை பெற்றது. 
 
அகில இலங்கை பாரத ஜயப்ப சேவா சங்க ஒன்றியத்தலைவர் குருநாதர் (ரவிகுருசாமி) அவர்களுக்கும்  வவுனியா மாவட்ட குருசாமி மற்றும்  ஏனைய மாவட்ட குருசாமிகளும் கௌரவிக்கப்பட்டனர்.  அதனை தொடர்ந்து அன்னதானமும் நடை பெற்றது. 















வவுனியா மாவட்டத்தில் முதன்முறையாக விஷேட மலையாள ஐயப்பன் பூஜை!


வவுனியா இரம்பைகுளம்  அருள்மிகு கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய திருமண மண்டபத்தில் எதிர்வரும் 11.12.2016 ஞாயிற்றுக்கிழமை கிழமை காலை 9.00மணிமுதல் 12.00 மணிவரை  வரை  இலங்கையில் இருந்து இதுவரைகாலமும் 5100 க்கும் மேற்பட்ட சாமிகளை  மலைக்கு அழைத்து சென்ற இந்துமத குருபீடாதிபதி சபரிமலை குருமுதல்வர் ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாச சாம்பசிவ சிவாசாரியார் அவர்களின் தலைமையிலான மலையாள பூஜை இடம்பெறுகிறது.

அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர்.





Sunday, November 6, 2016

வவுனியா கோவில்குளத்தில் இடம்பெற்ற சூரன் போர் நேரடி காட்சிகள் !!(படங்கள் வீடியோ)


வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் கந்தசஷ்டி விரதத்தின் ஆறாம் நாளான இன்று 05-11-2016(சனிக்கிழமை ) #சூரசம்காரம் என்று சொல்லப்படுகின்ற சூரன் போர் இடம்பெற்றது.வவுனியாவின் பல பகுதிகளிலும் மற்றும் நாடெங்கிலும் இன்றைய தினம் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.
இன்று காலை முதல் முருகபெருமானுக்கு அபிசேகங்கள் மற்றும் யாகம் என்பன இடம்பெற்று பிற்பகல் வேளையில் வசந்தமண்டப பூஜையின் பின் முருகபெருமான் போர்க்கோலம் பூண்டு உள்வீதி வலம்வந்து மாலை 4.30 மணியளவில் போர்களத்துக்கு எழுந்தருளினார்.
தொடர்ந்து யானை முகம்கொண்ட தாரகாசூரன் மற்றும் சிங்கமுகம் கொண்ட சிங்கமுகாசூரன் ஆகிய சூரபத்மனது சகோதரர்களுடன் போர்புரிந்து அவர்களை சம்காரம் செய்து சூரபத்மனுடன் போரில் ஈடுபட்டு இறுதியில் சூர சம்காரமும் இடம்பெற்றது .
வவுனியா கோவில்குளத்தில் இடம்பெறும் சூரன் போரில் பல்வேறு விதமான சிறப்புகள் காணப்படுவது வழமையானது.அதாவது மற்ற கோவில்களில் காணப்படும் சூரனில் தலையை மட்டுமே திருப்ப கூடியவகையில் அமைக்கப்பட்டுள்ளதை நீங்கள் கண்டிருப்பீர்கள் . ஆனால் இங்கே சூரனின் முழு உடலையும் திருப்பக்கூடிய வகையிலான சூரபத்மனது உருவம் காணப்படுவது சிறப்பாகும்.
அத்துடன் வாணவேடிக்கைகள் மற்றும் சூரன் போரின் இறுதியில் முருகபெருமான் வேல் கொண்டு சூரனை வீழ்த்துகின்ற முறையும் அதன் பின் சூரன் சேவலாகவும் மயிலாகவும் மாறி முருகபெருமானிடம் சரணாகதி அடையும் நிகழ்வும் தத்துரூபமாக செய்து காட்டப்படுவதும் இங்குள்ள சிறப்பான நிகழ்வுகளாகும் ..
இன்றைய சூரன்போரில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து  பக்தர்கள் கலந்து கொண்டனர்.
படங்கள்,வீடியோ :கஜன் என்கிற தம்பி

















































 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha