Wednesday, March 23, 2016

வவுனியா கோவில்குளம் சிவன் கோவிலின் சப்பர திருவிழா காட்சிகள்!!


வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பதின்மூன்றாம் நாளாகிய 21.03.2016 அன்று சப்பர திருவிழா இடம் பெற்றது.   மாலை நான்கரை மணியளவில் யாக பூசையும்  ஐந்தரை மணிக்கு  தம்ப பூசையும்  அதனை தொடர்ந்து வீ.கரன் குழுவினரின் சிறப்பு  தவில் நாதஸ்வர  கச்சேரி இடம்பெற்றது. அருளகம்  சிறுவர்களது சிறப்பு பண்ணிசைகச்சேரிஇடம்பெற்றது.

தொடர்ந்து மாலை எட்டுமணியளவில்  வசந்த் மண்டப பூசை இடம்பெற்று  ஒன்பது மணியளவில் வெடியோசைகள்  வானை பிளக்க எம்பெருமான் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  விநாயகர் வள்ளி  தெய்வானை சமேத  முருகப்பெருமான்  முதலியோர் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அதுவும் வவுனியாவில் மிக உயர்ந்த வானுயர்ந்த சப்பரத்தில்  திரு வீதி உலா வந்தனர். 



























Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha