Friday, June 10, 2016

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானம் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2016




வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானத்தின்  வருடாந்த  மகோற்சவம்  மூனர் வருடங்களின் பின் மீண்டும்  நாளை முதல்  ஆலய பிரதமகுரு  சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக்குருக்கள் தலைமையில் நாளை 11.06.2016 காலை 10.30  மணியளவில் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது.

மேற்படி ஆலய மகோற்சவம்  நாளை கொடிஏற்றதுடன் ஆரம்பமாகி
19.06.2016 -  ஞாயிற்றுகிழமை  தேர்த்திருவிழாவும்
20.06.2016   திங்கட்கிழமை தீர்த்த திருவிழாவும்
21.06.2016  செவ்வாய்க்கிழமை  பூங்காவனமும் இடம்பெற்று
22.06.2016   புதன்கிழமை வயிரவர் சாந்தியுடன் நிறைவு பெறுகிறது.





Thursday, June 9, 2016

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா : வவுனியா நெற் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு!!



வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா நாளை (11.06.2016 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 9 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடையும். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.
அன்றைய தினம் இரவு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள், மற்றும் இலங்கையின் முன்னணி பாடகர்கள் கலந்து சிறப்பிக்கும் எம்.சிவகுமாரின் அக்னி இசைக்குழுவின் மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறும்.
இந்நிகழ்வுகள் அனைத்தையும் இணையத்தளம் மூலமாக நாள் முழுவதும் நேரடி ஒளிபரப்பினை மேற்கொள்ளுவதற்கான ஏற்பாடுகளை வவுனியாநெற் இணையத்தளக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக இவ் ஆலயத்தின் பொங்கல் விழா நிகழ்வுகளை வெற்றிகரமாக நேரடியாக ஒளிபரப்பிய வவுனியா நெற் இணையத்தளம் இம்முறை 4வது ஆண்டாக நவீன ஒலி, ஒளி சாதனங்களுடன் மிகத் துல்லியமான HD தரத்துடன் நேரடி ஒளிபரப்பினை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
காலை 9 மணிமுதல் இன் நேரடி ஒளிபரப்பினை உலகின் எப்பாகத்திலிருந்தும் வவுனியா நெற் இணையத்தளத்தில் கண்டுகளிக்க முடியும். இச் செய்தியை உங்கள் உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள்.


Tuesday, June 7, 2016

நயினை நாகபூசணி அம்பாளின் கொடியேற்ற முழுமையான படத்தொகுப்பு !!


உலகாளும் சக்தி நயினையுறை நாகபூஷணி அம்பிகையின் 
துர்முகி வருட மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் 
ஆரம்பம் ..நிகழ்வின் பதிவுகள் .காணக் கண்கோடி வேண்டும் ..ஓம் சக்தி ...பசிதீர்த்து அமுதளித்த அமுதசுரபியும் தாகம் தீர்த்தருளிய கோப்பிசபையினரும்







வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயம் பொங்கல் உற்சவம்(படங்கள் ,வீடியோ)


வரலாற்று சிறப்புமிக்க வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா நேற்று 06.06.2016திங்கட்கிழமை இடம்பெற்றது.

வருடாந்தம் சிறப்பாக இடம்பெற்று வரும் பொங்கல் விழாவில் காலையில் இருந்தே பக்த அடியார்கள் கோவிலை நோக்கி சென்றிருந்ததுடன் பல பாகங்களில் இருந்தும் மக்கள் வருகை தந்திருந்தனர்.

இந் நிலையில் காவடி, பறவைக்காவடி, பாற்செம்பு எடுத்து பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவு செய்திருந்ததுடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தில் பொங்கல்பொங்கி வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை பண்டமெடுக்கும் நிகழ்வுகள் இடம்பெற்று ஆலயத்தின் விசேட பொங்கல் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.






















Tuesday, May 31, 2016

நயினை நாக­பூ­ஷ­ணிக்கு மகோற்­சவம் எதிர்­வரும் 6 ஆம் திகதி கொடி­யேற்­றத்­துடன் ஆரம்பம்!!


சரித்­திர பிர­சித்தி பெற்ற நயி­னா­தீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆல­யத்­தி­னது வரு­டாந்த மகோற்­சவம் எதிர்­வரும் மாதம் 6 ஆம் திகதி திங்கட் கிழமை நண்பகல் 12 மணி­ய­ளவில் கொடி­யேற்­றத்­துடன் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.
 
தொடர்ந்து பதி­னாறு தினங்கள் உற்­ச­வங்கள் ஆல­யத்தில் இடம் பெற­வுள்­ளது. 14 ஆம் திகதி செய்­வாய்க்­கி­ழமை 108 சங்­குகளால் அம்­பா­ளுக்­கு பால் அபி­ஷே­கமும் 15 ஆம் திகதி புதன்­கி­ழமை பகல் சிவ­பூ­சை­யுடன் இரவு திரு­மஞ்­சமும் 16 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பகல் விசேட கருட பூசையும் 18 ஆம் திகதி சனிக்­கி­ழமை இரவு பெரிய சப்ப­ரத்­தி­ரு­வி­ழாவும் மறு­தி­ன­மான 19 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை காலை தேர்­த்தி­ரு­வி­ழாவும் 20 ஆம் திகதி திங்­கட்­கி­ழ­மை­ காலை தீர்த்தத் திரு­வி­ழாவும் 21 ஆம் திகதி செய்­வாய்க்­கி­ழமை மாலை தெற்­பத்­தி­ரு­வி­ழா­வுடன் ஆல­யத்­தி­னது உற்­ச­வங்கள் யாவும் நிறை­வ­டையும்.
 
ஆல­யத்­தி­ரு­வி­ழாவில் கலந்து கொள்­கின்ற அடியார்களி­னது தாக சாந்தி மற்றும் பசிப் பிணி ஆகி­ய­வற்­றினை தீர்ப்ப­தற்­கான ஏற்­பா­டு­களை ஆலயத்தின் மீது பற்­றுள்ள பல அடி­யார்­களும் அமுத சுரபி அன்ன­தான சபை­யி­னரும் ஒழுங்கு செய்து வரு­கின்­றனர். ஆல­யத்­தி­ரு­விழா காலங்­களில் நாட்­டி­னது பல இடங்­களில் இருந்தும் ஆல­யத்­திற்கு வரு­கின்ற அடியார் களி­னது போக்­கு­வ­ரத்து வச­திகள் யாழ்ப்­பாணம் மத்­திய பஸ் தரிப்பு இடத்தில் இருந்து குறி­காட்­டுவான் இறங்கு துறை வரைக்கும் இலங்கைப் போக்­கு­வ­ரத்து வட­பி­ராந்­திய சபையும் தனியார் சிற்­றூர்தி சங்­கத்தைச் சேர்ந்த சிற்­றூர்­தி­களும் அதிக அளவில் சேவையில் ஈடு­ப­டு­வ­தற்கும் முன்­வந்­துள்­ளனர்.
 
இதே­போன்று குறி­காட்­டுவான் இறங்கு துறைக்கும் நயி­னா­தீவு இறங்கு துறைக்குமிடையே சேவையில் ஈடு­ப­ட­வி­ருக்கும் மோட்டார் பட­கி­ன­து­ சே­வை­களும் ஆலயத் திரு­விழா காலங்­களில் வரு­கின்ற யாத்­தி­ரிகர்களி­னது வரு­கை­யினைத் தொடர்ந்து கட்­டுப்­பாடு இன்றி சேவை­களை மேற்­கொள்­வ­தற்கு முன்­வந்­துள்­ளன. இதே­போன்று ஆல­யத்­தி­னது திரு­வி­ழா­வினை யொட்டி சென்­ற­வ­ரு­டங்­களைப் போல இவ்­வ­ரு­டமும் மின்­சார விநி­யோ­கத்­தினை வழங்­கு­வ­தற்கு இலங்கை மின்­சார சபை­யினர் சம்­மதம் தெரிவித்­துள்­ளதுடன் சுகா­தாரத் திணைக்­களத்­தி­னரும் ஆலய சுற்­றா­டலில் புனிதத்­தன்­மை­யினை பேணு­வ­தற்­கு­ரிய அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­வதற்கு தயா­ராக உள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளனர். குடி தண்ணீர் சேவை­யினை வேலணை சாட்­டியில் இருந்து வேலணை பிர­தேச சபையின் ஊடாக தண்ணீர் பவு­சர்கள் மூல­மாக பெற்­றுக்­கொள்­வ­தற்கும் நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.
 
ஆலயத்­தி­னது திரு­வி­ழாக்­கா­லங்­களில் ஆலயச் சுற்று சூழல் பகு­தி­களில் மது­பா­வனை மற்றும் புகைத்தல் மற்றும் பச்சை குத்­துதல் போன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு முற்­று­மு­ழு­தாக தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.பொலித்தீன் பாவ­னை­களை வர்த்­த­கர்­களும் ஆல­யத்­திற்கு சென்று வரு­கின்ற மக்­களும் பாவிப்­ப­தற்கு முற்­றாக தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு பதி­லாக கட­தாசி (பேப்பர்) யிலான அல்­லது ஓலை­யினால் செய்­ய­ப்பட்ட பைகளைப் பாவிக்கும் படியும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. மேலும் நயி­னா­தீவு இறங்­கு­து­றை­மு­கத்தில் இருந்து குறிகாட்டுவான் இறங்குதுறை முகத்திற்கு இடையில் சேவையாற்றிவருகின்ற (பாரி) பாதை சேவையினை பழுதடையாத நிலையில் ஆலயத்தினது திருவிழா காலங்களில் இயங்குவதற்கு தயார் நிலையில் வைத்துக் கொள்ளும்படி யாழ். அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் யாழ்ப்பாண அதிகார திணைக்களத்தினது பொறியியலாளரை பணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2016


வரலாற்று பிரசித்தி பெற்ற வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவின் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர்தெரிவித்துள்ளனர்.
ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா, எதிர்வரும் திங்கட்கிழமை 06 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் உட்பட ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நலன் கருதிய செயற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து திணைக்களங்கள், நிறுவனங்கள், பொலிஸார் மற்றும் பக்கதர்களின் ஒத்துழைப்புடன் இம்முறையும் சிறப்பாக பொங்கல் விழா இடம்பெறவுள்ளதாக புதூர் ஆலய நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
புதூர் ஆலய பொங்கல் விழாவிற்கு வருடாந்தம் வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதருகின்றமை சிறப்பம்சமாகும்.






Monday, May 23, 2016

ஆறுமுகத்தான் புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அன்னதான மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டு!!(படங்கள்)


வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அன்னதான மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் கடந்த  21.05.2016 சனிக்கிழமை காலை  இடம்பெற்றது .

 இந்த நிகழ்வில் ,பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன்  மற்றும் கலாசார உத்தியோகத்தர்  நித்தியானந்தன்  கலந்து கொண்டு  ஆலயத்தின் அன்னதான மண்டபத்துக்கான அடிக்கல்லை  நாட்டி வைத்தனர் . மேற்படி நிகழவில் ஆலய பரிபாலன உறுப்பினர்கள் மற்றும் ஆறுமுகத்தான் புதுக்குளம் கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் ..











வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம் 2016!!(படங்கள்)


வவுனியா நெளுக்குளம் அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய  வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம்  கடந்த 21.05.  2016 சனிக்கிழமை காலை ஒன்பது மணியளவில்  இடம்பெற்றது . மாலையில் கொடியிறக்க வைபவமும் இடம்பெற்றது .






.


வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய இரதோற்சவம் 2016!!(படங்கள்)


வவுனியா நெளுக்குளம் அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய  வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் கடந்த 20.05.  2016 வெள்ளிகிழமை காலை ஒன்பது மணியளவில்  இடம்பெற்றது .
மேற்படி நிகழ்வில் நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டு கொண்டு தங்களது நேர்த்திகடன்களை நிறைவு செய்திருந்தனர் ...













 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha