Saturday, June 9, 2018

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2018


வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா  எதிர்வரும் 16-06-2018 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.
பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 9 மணியளவில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடையும். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.
அன்றைய தினம் இரவு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள்,  மற்றும் சிறப்பு நிகழ்வாக தென்னிந்திய பின்னணிப் பாடகர்கள் ஜித்தின் ராஜ் (ஓமேல ஒரு கண்ணு பாடல் புகழ் ), சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜேர்சன் , கலக்கப்போவது யாரு புகழ் தகௌபீக், இவர்களுடன் இணைந்து இலங்கையின் முன்னணி இசைக்குழுவான பிரசாத்தின் ஸ்ருதிலயா இசைக்குழு வழங்கும் மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறும். அத்தோடு இலங்கையின் முதல்தர ஒலி ஒளி அமைப்பாளர்களான கலிபோனியா சவுண்ட்ஸ் நிறுவனத்தினரின் அதிரடி ஒலி ஒளி மற்றும் கண்கவர் மின்விளக்குகளுடன் இவ் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்நிகழ்வுகள் அனைத்தையும் இணையத்தளம் மூலமாக நாள் முழுவதும் நேரடி ஒளிபரப்பினை மேற்கொள்ளுவதற்கான ஏற்பாடுகளை வவுனியாநெற் இணையத்தளக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாக இவ் ஆலயத்தின் பொங்கல் விழா நிகழ்வுகளை வெற்றிகரமாக நேரடியாக ஒளிபரப்பிய வவுனியா நெற் இணையத்தளம் இம்முறை நவீன ஒலி, ஒளி சாதனங்களுடன் மிகத் துல்லியமான HD தரத்துடன் நேரடி ஒளிபரப்பினை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.




Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha