Friday, March 2, 2018

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தீர்த்தோற்சவம்!(படங்கள்,வீடியோ)


இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் பத்தாவது மகோற்சவ பெருவிழாவில்  நேற்று  01.03.2018 வியாழகிழமை காலை தீர்த்த திருவிழா இடம்பெற்றது.


வவுனியா இறம்பைக்குளம் மகளீர்கல்லூரியின் இந்துமாமன்ற ஆசிரியர்களின் உபயத்தில் தீர்த்த உற்சவம் காலை எழுமணியளவில் ஆரம்பமானது. மேற்படி உற்சவத்தில் கல்லூரியின் ஆசிர்யர்கள் பெருமளவில் பங்குபற்றியிருந்தனர் .

 சுண்ணம் இடித்து கிரியைகள் இடம்பெற்று காலை பத்து மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று காலை பதினோரு மணியளவில் ஆலயத்தின் தீர்த்த கிணற்றடியில் கருமாரி நாகபூசணி சாமுண்டேஸ்வரி ஆகிய தெய்வங்கள் ஆலயத்தின் இரண்டாம் வெளிவீதி ஊடாக வந்தடைந்தனர். அங்கு தீர்தோற்சவம் இடம்பெற்று பெற்று அர்ச்சனைகள் இடம்பெற்று பின்னர் மதியம் ஒரு மணியளவில் யாகம் கலைக்கப்பட்டது.
























































































Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha