Wednesday, April 6, 2016

துர்முகி வருடப்பிறப்பின் சுப நேரங்கள் !!!






எதிா் வரும் 13.04.2016 புதன் கிழமை (பங்குனி 31) அன்று மாலை 6.36 மணிக்கு பூா்வபக்க ஸப்தமி திதியில், திருவாதிரை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில், துலா லக்கினத்தில், விருச்சிக நவாம்சத்தில் "துா்முகி" வருடம் பிறக்கின்றது. 


  • விஷ புண்ணிய காலம் (மருத்து நீா் வைத்து நீராடும் நேரம்) அன்று மாலை 2.36 தொடக்கம் இரவு 10.36 வரை. 
  • அணியவேண்டிய ஆடையின் நிறம் வெள்ளை மற்றும் பச்சை. 
  • கைவிஷேட நேரம் *16.04.2016 (சனி) இரவு 10.38 - 12.23 *17.04.2016 (ஞாயிறு) அதிகாலை 2.35 - 4.04 *18.04.2016 (திங்கள்)  காலை 9.07 - 9.35  பகல் 9.47 - 11.46  மாலை 6.05 - 7.25  இரவு 10.19 - 12.15 வரை. 


சங்கிரம தோஷ நட்சத்திரங்கள்  மிருகசீாிடம், திருவாதிரை, புநா்பூசம், சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, சதயம். இந்த நட்சத்திரங்களில் பிறந்தோா் தவறாது மருத்து நீா் வைத்து நீராட வேண்டும். பிறக்கின்ற புதுவருடம் முருகப்பெருமானின் அருளாசியுடன், அணைவருக்கும் சிறந்த வருடமாக அமையட்டும். 

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha