Sunday, November 6, 2016

வவுனியா தாண்டிக்குளம் ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவ சூரசம்ஹாரம்!!(படங்கள்)


வவுனியா  A9  வீதி தாண்டிக்குளத்தில்  அமைந்துள்ள  அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின்  கந்தசசஷ்டி  விரதத்தின் இறுதி நாளான நேற்று(05.11.2016)   சனிக்கிழமை காலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று  முருகபெருமானை  நோக்கி யாகம்  நடைபெற்று  பிற்பகல்  நாலு மணியளவில்  சூரசம்காரம் இடம்பெற்றது .
  வவுனியா தாண்டிக்குளம் A9   வீதியில்  முருகபெருமானுடன்  சூரபத்மன்  மோதிக்கொண்ட  நிகழ்வை காண  நூற்றுக்கணக்கான  முருகபெருமானின் பக்தர்கள்  கலந்து கொண்டனர்.

















Saturday, November 5, 2016

வவுனியா தோணிக்கல் அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் சூரசம்ஹாரம்!(படங்கள்)


 வவுனியா தோணிக்கல் அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில்  கந்தசஷ்டி உற்சவத்தின் ஆறாவது நாளான நேற்று (05.11.2016) சூரசம்ஹாரம் இடம்பெற்றது .
 காலை முதல் அபிசேகங்கள் மற்றும் யாகம் என்பன சிவஸ்ரீ.முத்து ஜெயந்தி நாத குருக்கள் தலைமையில் இடம்பெற்று பிற்பகல்  மூன்று மணியளவில் சூரசம்காரம் இடம்பெற்றது .
மேற்படி நிகழ்வில்  அம்பாளின் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.



















வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தின் சூரசம்காரம் . (படங்கள்)


 வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதத்தின் ஆறாம் நாளான நேற்று 05.11.2016  சூரன் போர் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

 காலைமுதல் அபிசேகம் மற்றும் யாகம் என்பன  மலையில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் சிவஸ்ரீ சங்கரசர்மா தலைமையில் இடம்பெற்று  மாலை நான்கு  மணியளவில்  முருகபெருமானுடன்  சூரபத்மன்  மலையடிவாரத்தில்  மோதிகொண்ட 
 சூரன் போர் வெகு சிறப்பாக இடம்பெற்றது .












வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவ சூரசம்ஹாரம்!!(படங்கள்)


வவுனியா கந்தசாமி கோவிலில் சிறப்பாக நடைபெற்ற சூரன் போர்

கந்தசஸ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று சனிக்கிழமை நாடு பூராகவும் உள்ள முருகன் ஆலயங்களில் சூரன் போர் சிறப்பாக இடம்பெற்றது.

அந்த வகையில் வவுனியா கந்தசாமி கோவிலிலும் சூரன் போர் நடைபெற்றது.

சூரன் போர் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது. இதன்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.










































































































 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha