Saturday, March 11, 2017

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தேர்-2017!!



இலங்கைத் தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருதநில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னித்திருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடைசூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீசக்கரத்துடன் கூடிய ஸ்ரீசக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீகருமாரி நாகபூசணி அம்பாளின்   ஒன்பதாம்  மகோற்சவ பெருவிழாவில் நேற்றைய தினம் 10.03.2017 வெள்ளிகிழமை  காலை 10 மணியளவில் தேர்த் திருவிழா இடம்பெற்றது.
காலை 5.30 மணிக்கு கோவிலின் பிரதமகுரு  சிவஸ்ரீ  முத்து ஜெயந்தி நாதகுருக்கள்  தலைமையில் காலைக் கிரியைகள் ஆரம்பமாகி காலை எட்டுமணிக்கு வசந்த மண்டபபூஜை இடம்பெற்று பின்னர் ஸ்ரீகருமாரி நாகபூசணி அம்பாள் உள்வீதி வலம்வந்து சரியாக காலை 9.30 மணியளவில் தேரில் ஆரோகணித்து 10.00 மணியளவில் ஆண் பக்தர்கள் ஒருபுறமும் பெண் பக்தைகள் மறுபுறமும் வடம் பிடிக்க அம்பாள் மயான வீதி ஊடாக கொரவபொத்தான வீதியை நூறுக்கணக்கான பக்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இருபுறமும் சூழ்ந்திருக்க வந்தடைந்தாள். .
செதில்,பால்காவடிகள் கற்பூரச் சட்டிகள் அத்துடன் அங்கபிரதட்சனம் செய்துகொண்டும் கொண்டு அம்பாளின் அடியார்கள் தம் நேர்த்திகடன்களை நிறைவேற்றிய வண்ணம் அம்பாளின் பின்னால் வலம்வந்தனர். காலை 11.00 மணியளவில் அம்பாளின் ரதம் இருப்பிடத்தை வந்தடைந்தது. தொடர்ந்து அர்ச்சனைகள் இடம்பெற்று மதியம் ஒருமணியளவில் அவரோகணம் என்று சொல்லகூடிய பச்சைசாத்தல் உற்சவம் இடம்பெற்றது.






























































Thursday, March 2, 2017

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் -2017(படங்கள்)


வவுனியா தோணிக்கல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய  வருடாந்த மகோற்சவம் நேற்று 02.03.2017  வியாழக்கிழமை    கொடிஏற்றதுடன்  ஆரம்பமானது.
மேற்படி ஆலய த்தின்  மகோற்சவம் உற்சவகுரு  சிவஸ்ரீ சிதம்பர லக்சுமி திவாகர குருக்கள் தலைமையில் இடம்பெறுகின்றது .
மேற்படி மகோற்சவத்தில் 
10.03.2017 வியாழக்கிழமை  சப்பர திருவிழாவும் 
11.03.2017 வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழாவும் 
12.03.2017  சனிக்கிழமை  தீர்த்த திருவிழாவும் 
13.03.2017 பூங்காவனமும் இடம்பெறுகிறது ....




















வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் கொடியேற்றம்! (படங்கள்,வீடியோ)


இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் ஒன்பதாவது ஆண்டு  மகோற்சவ பெருவிழா  நேற்று (02.03.2017)வியாழக்கிழமை பகல் 11.05மணிக்கு கொடிஏற்றதுடன் ஆரம்பமாகியது .
ஆலய மகோற்சவகுரு சிவஸ்ரீ முத்து ஜெயந்தி நாத குருக்கள்  தலைமையில் இடம்பெற்ற கொடியேற்ற நிகழவில்  நூற்று கணக்கான அம்பாளின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.















Wednesday, March 1, 2017

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் மகோற்சவம்-2017


இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் ஒன்பதாவது ஆண்டு  மகோற்சவ பெருவிழா

நிகழும் துர்முகி    வருடம் மாசி மாதம் 18ஆம்நாள்  (02.03.2017)வியாழகிழமை சதுர்த்தி  திதியும்  அச்சுவினி   நட்சத்திரமும் அமிர்தயோகமும் கூடிய சுபதினத்தில் பகல் 11.05மணிக்கு கொடிஏற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது .
மேற்படி மகோற்சவம்  ஆலய மகோற்சவகுரு சிவஸ்ரீ முத்து ஜெயந்தி நாத குருக்கள்  தலைமையில் இடம்பெற்ருகிறது.






 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha