Monday, July 11, 2016

வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய பொங்கல் உற்சவ பகல் நிகழ்வுகள்!!(படங்கள்!!)


வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் உற்சவத்தில் இன்று 11.07.2016 திங்கட்கிழமை  காலை  பாற்குட பவனி இடம்பெற்றது .
அத்தோடு  வழமைபோன்று  ஒவ்வொரு  நாளும் ஒவ்வொரு கிராமமக்களும்  தங்களது கிராமங்களின் பயன் கருதி பூசை வழிபாடுகளில் பங்குபற்றுவது வழமையானஒன்றாகும் . அந்தவகையில்  இன்று கிடாசூரி கிராமமக்களின்  உபயத்தில் இன்றைய நிகழ்வு இடம்பெற்றது .
வசந்தமண்டப பூஜையின் பின் அம்பாள உள்வீதி வலம் வந்து தொடர்ந்து இடபவாகனத்தில் வெளிவீதியில் எழுந்தருளிய நிகழ்வு இடம்பெற்றதோடு  பகல் நிகழ்வுகள் நிறைவு பெற்றது .






















Sunday, July 10, 2016

வவுனியா கோவில்குளம் சிவன் கோயிலில் இடம்பெற்ற ஆனி உத்தரம் !!(படங்கள்,வீடியோ)


இன்று 10.07.2016  வவுனியா‬ ‪‎கோவில்குளம்‬‪ அருள்மிகு‬ ‪‎ஸ்ரீ‬ அகிலாண்டேஸ்வரி‬ ‪ ‎சமேத‬‪ அகிலாண்டேஸ்வரர்‬ திருக்கோவிலிலில் ஆனி உத்தரநிகழ்வு இடம்பெற்றது .
 இன்று அதிகாலை முதல் அபிசேக மூர்த்தியான  நடராஜபெருமானுக்கு ‪ ஆனி‬உத்தரத்தினை முன்னிட்டு  விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று  பின்‪ நடராஜப்பெருமான்‬ பார்வதி‬ சமேதராய் ‪‎ஆடியாடி‬ வீதிவலம் வந்த  நிகழ்வு இடம்பெற்றது.
புளிக்கண்டவர்க்குப் புனலுறுமாப்போற்
கனிக்குந் திருக்கூத்துக்கண்டவர்க்கு எல்லாந்
துளிக்குந் கண்ணீருடன் சோரு நெஞ்சத்திருள்
ஒளிக்கும் ஆனந்த அமுது ஊறும் உள்ளத்தே” –திருமந்திரம்











Friday, July 8, 2016

வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கற்பகவிருட்ச காட்சி !!(படங்கள்,வீடியோ)


வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் பதியில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன்  மகோற்சவத்தின்  மூன்றாம்   நாளான  நேற்று  ௦7.07.2016  வியாழக்கிழமை   கற்பக விருட்ச காட்சி திருவிழா இடம்பெற்றது .


நேற்றைய உற்சவத்தில்     கற்பகதரு போன்று அலங்கரிக்கபட்ட   முத்துமாரியம்பாள்  விநாயகர் முருகபெருமான் சகிதம் உள்வீதி வெளிவீதி வலம்  வந்து பக்தர்களுக்கு அருளிபாலித்த நிகழ்வு இடம்பெற்றது!

படங்கள் : ராகுல் சர்மா  


















Wednesday, July 6, 2016

வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கொடியேற்றம் !!(படங்கள்)


இலங்கை திரு நாட்டின் கண்ணே வடபால் அமைந்து சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வன்னி மாநகரில் வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் பதியில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன்  மகோற்சவம் நேற்று  ௦5.07.2016 செவ்வாய்கிழமை நண்பகல் பன்னிரண்டு மணியளவில் மகோற்சவ குரு சிவஸ்ரீ .சதா சங்கரதாஸ் சிவாசாரியார் தலைமையில் கொடிஏற்றதுடன்  ஆரம்பமாகியது .
மேற்படி மகோற்சவத்தில் 
17.08.2016 ஞாயிற்றுகிழமை சப்பர திருவிழாவும்

18.08.2016 திங்கட்கிழமையன்று காலை ரதோற்சவமும்
19.08.2016 செவ்வாய்கிழமையன்று தீர்த்தோற்சவமும் இடம்பெறும் .





















Monday, July 4, 2016

வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் பொற்கோயில் வருடாந்த பொங்கல் கொடியேற்றத்துடன் ஆரம்பம் !



வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் விஞ்ஞாபனம் (04.07.2016)  திங்கட்கிழமைகொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது .

  மேற்படி உற்சவத்தில் 11.07.2016 அன்று பொங்கல் உற்சவம் நடைபெற்று 12.07.2016 அன்று வைரவர் மடையுடன் நிறைவுபெறவுள்ளது.

தினமும் கண்ணகை அம்மன் ஏடு வாசிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளதுடன் தினமும் அன்னதானமும் வழங்கப்படவுள்ளது. பக்த அடியார்கள் அனைவரையும் கலந்துகொண்டு கண்ணகை அம்மனின் அருளைப் பெற்றுய்யுமாறு ஆலய பரிபாலன சமையினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.














 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha